கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.என். மில்ஸ்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 45) ரியல் எஸ்டேட் அதிபர் .இவர் வீடுகளும் கட்டிக் கொடுத்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா ( வயது 41 ) இவர்களுக்கு 2 மகள்களும்,11 வயதில் ஜெய சூர்யா என்றமகனும் உள்ளனர். ஜெயசூர்யா அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு படித்து வருகிறான் .ஸ்ரீதரன் கார் டிரைவராக நவீன் ( வயது 27) என்பவர் பணியாற்றி வந்தார் .ஸ்ரீதர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் அவருக்கு உதவியாக நவீன ரியல் எஸ்டேட் புரோக்கராக செயல்பட்டு நிலத்தை விற்பனை செய்வது உண்டு .இதற்காக அவர் ஸ்ரீதரிடம் கமிஷன் பெற்று கொள்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக நவீனுக்கு சரியாக சம்பளமும் நிலத்தை விற்பனை செய்து கொடுத்ததில் கமிஷன் தொகையும் ஸ்ரீதர் வழங்கவில்லை. இதுகுறித்து அவரிடம் பலமுறை கேட்டபோது தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் பணம் வந்ததும் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார் .ஆனால் பணம் வந்து அவர் சம்பளம் தொகையை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து பல நாட்களாகியும் அவர் சரியாக சம்பள பணத்தை கொடுக்காததால் ஆத்திரமடைந்த நவீன் வேலை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விட்டாராம் .இந்த நிலையில் கடந்த வாரம் ஸ்ரீதரை சந்தித்த நவீன் நான் மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்வதாகவும் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விரைவில் கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார் .அதற்கு அவர் விரைவில் பணம் கொடுப்பதாக தெரிவித்து வேலைக்கு சேர்த்துக் கொண்டார் .ஆனால் ஸ்ரீதர் பணம் கிடைத்தாலும் அவர் அவருக்கு கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நவீன், ஸ்ரீதரின் மகனை காரில் கடத்தி சென்று மிரட்டி பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினார். இதன்படி நேற்று முன்தினம் காலையில் ஸ்ரீதரின் மகன் ஜெய் சூர்யா டீயூசன் சென்றார்.அவரை அழைத்து வருவதற்காக பிற்பகல் 3 மணிக்கு நவீன் டீயூசன் மையத்திற்கு சென்றார் .பின்னர் மாணவன் ஜெயசூர்யாவை காரில் கடத்திக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதற்கிடையில் டியூசன் சென்ற மகன் நீண்ட நேரம் ஆகிய வீட்டிற்கு வராததால் பதட்டமடைந்த ஸ்ரீதரின் மனைவி கிருத்திகா டீயூசன் சென்டருக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது மாணவனை கார் டிரைவர் நவீன் அழைத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். உடனே கிருத்திகா தனது கணவரை தொடர்பு கொண்டு ஜெயசூர்யா சென்று 2 மணி நேரம் ஆகிறது .இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். உடனே ஸ்ரீதர் தனது கார் டிரைவர் நவீனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை .இந்த நிலையில் சிறிது நேரத்தில் நவீன் தனது செல்போனில் இருந்து சிறிது தொடர்பு கொண்டார். அப்போது அவர் தனக்கு ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் மகனை கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் நவீன் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே சென்று கொண்டிருப்பது தேடிவந்தது. உடனே போலீசார் பவானி போலீசுக்கு தகவல் தெரிவித்து நவீன் செல்லும் காரின் பதிவு எண்ணை தெரிவித்து அந்த காரைமடக்கி பிடிக்கும் படி கூறினர்இதை யடுத்து சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த காரை போலீசார் மடக்கி பிடித்து துடியலூர் போலீசுக்கு தகவல்தெரிவித்தனர்.துடியலூர் போலீசார் அங்கு சென்று அவரைகோவைக்கு அழைத்து வந்துகைது செய்தனர். பின்னர் போலீசார் நவீனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட ஜெயசூர்யா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகனைபணம் கேட்டு கார் டிரைவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
ரூ.12 லட்சம் கேட்டு கோவை ரியல் எஸ்டேட் அதிபர் மகன் காரில் கடத்தல் – டிரைவர் கைது..!
