கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிதாக 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்..!

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஏற்கனவே 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பூ மார்க்கெட் ,தடாகம் ரோடு, ஆவின் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதன் மூலம் ஆர் .எஸ். புரம் பகுதி முழுவதும் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்திருப்பதாக கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்..