கோவை சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் – போக்சோவில் 7 மாணவர்கள் கைது..!

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவரை கடந்த 16ஆம் தேதி ஒரு கும்பல் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வீட்டுக்கு கடத்திச் சென்றனர்..அங்கு வைத்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர், கோவைப்புதூர் பகுதியில் உள்ள 3 தனியார் கல்லூரிகளில்
படிக்கும் 7 மாணவர்களை போலீசார் இன்று கைது செய்தனர் . இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..