கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள இந்திரா நகரில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கேரள மாநில டிக்கெட் விற்பனை செய்வதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் அப்துல் முத்தலிப் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 17 லாட்டரி டிக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக அந்த பெட்டிக்கடையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (வயது 58) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 17 லாட்டரி டிக்கெட் லாட்டரி, லாட்டரி டிக்கெட் விற்ற பணம் ரூ 43 ஆயிரத்து 740 பறிமுதல் செய்யப்பட்டது.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..