ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கோவை பெண்ணிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி.!!

கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ஹரிப்பிரியா (வயது 27 )இவருக்கு 8-12-2023 அன்று டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் சோகர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,அதை வீட்டிலிருந்தே செய்யலாம். அதற்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய ஹரிப்பிரியா பல்வேறு தவணைகளில் அந்த முகவரிக்கு ரூ 13 லட்சத்து 36 ஆயிரத்து 565 அனுப்பி வைத்தார். பணத்தை முழுமையாக ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கோவை பெண்ணிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி.!!ற்றுக் கொண்டதும் அந்த நிறுவனத்தில் வந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிப்பிரியா கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.