whatsapp மூலம் நூதன மோசடி… ரூ.12 லட்சத்தை இழந்த கோவை பெண்.!!

கோவை ரத்தினபுரி, கணபதி வெங்கடாசலம் ரோட்டை சேர்ந்தவர் பூபதி .இவரது மகள் அஸ்வினி. (வயது 26) இவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “கோல்டு மேன் சச் ஸ்டாக் “என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல கோடி சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது . இதை நம்பி அஸ்வினி பல்வேறு தவணைகளில் வங்கி கணக்கு மூலம் 19 தவணைகளில் ரூ. 13 லட்சத்து 77 ஆயிரத்து 400 அனுப்பி வைத்தார். முதலில் ரூ 1 லட்சம் லாப தொகையை அந்த நிறுவனம் அனுப்பியது. பிறகு எந்த பணமும் அனுப்பபடவில்லை . அந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஸ்வினி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.