கோவை கணபதி ஆறு புளியமரம் ,ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் சுரேந்திரன் .இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 36) இவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள இக்கரைபோளுவாம்பட்டியில் வசிக்கும் இவரது தாயார் வசந்தி (வயது 52)சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பெண் மர்ம மரணம்: தாய் போலீசில் புகார்..!
