கேரள மாநிலம் மலப்புரம் வட்டம் குளத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர், இவரது மகன் முகமது அன்சில் ( வயது 23 ) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வருகிறார். கணபதி டெக்ஸ்டூல் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அறையில் இவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அறைக்குள் அத்துமீறி புகுந்து அவரை தாக்கி மிரட்டியது பின்னர் செல்போனை . பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டது . இது குறித்து சரவணம்பட்டி போலீசில் முகமத் அன்சில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் வழக்கு பதிவு செய்து போத்தனூர் சாய் நகர் சேர்ந்த செபின் ( 25 ) கருணாநிதி நகர் ரகுமான் (24) தெற்கு உக்கடம் முகமத் அபீப் ( 22) வெள்ளலூர் தமிழழகன் ( 24)சாய் நகர் முகமது சையத் ( 23)அழகு நகர் அபிரிடி (26) கேரளா ஆஸ்கர் (23) பட்டில் ( 23) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
கல்லூரி மாணவரை தாக்கி செல்போன் பறிப்பு – 8 பேர் சிறையில் அடைப்பு..!
