கோவை பீளமேடு காந்திமா நகர், எப்.சி.ஐ. ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அர்ஜுன் (வயது 17) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் தங்கி இருந்தார் . 3 நாட்களாக உடல்நிலை சரியில்லை .இதனால் கல்லூரிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அவரது தாயார் விஜயலட்சுமி அர்ஜுனிடம் செல்போனில் தொடர்பு கொண்டார். அவர் எடுத்துப் பேசவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் தங்கி இருந்த அறையை பார்த்த போது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது .இது குறித்து தாயார் விஜயலட்சுமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அர்ஜுன் பிணமாக கிடப்பது தெரியவந்தது.பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,இவர் எப்படி செத்தார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply