ஒரு கையில் பீர்பாட்டில்.. இன்னொரு கையில் சிகரெட்… கோவை மாநகரில் உள்ள ஒரு “டாஸ்மாக் பார்” ல் எந்த தயக்கமும் இன்றி ஓர் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பர்களுடன்…மதுவும், புகையும்..
கல்லூரி மாணவி தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது..
இந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பரவி வருகிறது.. இதை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. அத்துடன் கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது.
தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னாபின்னமாகி விட்டன.
இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்.. எங்கு செல்கிறது இளம் தலைமுறையினர்… வேதனை அளிக்கும் வீடியோ…