கோவை ஆர். எஸ் .புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று சீரநாயக்கன்பாளையம், கருப்பராயன் கோவில் மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்பபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் சிகரெட்டுகளும், கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 1, 930 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர் கஞ்சாவை சிகரெட்டில் அடைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது . இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சென்னை தாம்பரம் சேத்தலப்பாக்கம், மின்வாரிய காலனியைச் சேர்ந்த கண்ணன் மகன் கோகுல் (வயது 24) என்பது தெரிய வந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது..
கல்லூரி மாணவர்களே குறி… கோவையில் கஞ்சா சிகரெட் விற்பனை- சென்னை வாலிபர் கைது..!
