சேலம் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . இவரது மகள் தர்ஷினி ( வயது 22 ). இவர் வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் எம். எஸ். சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .அங்குள்ள ராமலிங்கம் காலனியில் பெண்கள் தங்கும் விடுதியில தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று சொந்த ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டுச் சென்றவர். ஊருக்கு செல்லவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை சீனிவாசன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..
இதே போல கோவை இடையர்பாளையம் சின்ன பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னர். இவரது மனைவியின் நாகம்மாள் ( வயது 30) இவர் செல்போனில் யாரிடமோ அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார் இதை இவரது கணவர் கண்டித்தார். இதனால் மனம் உடைந்த நாகம்மாள் கடந்த 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொன்னர் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.