கோவையில் ஏ.சி.வசதியுடன் போக்குவரத்து போலீசாருக்கு நவீன நிழற்குடை… கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்..!!

கோவை மாநகரில் உள்ள சிக்னல்கள் மற்றும் ரவுண்டானாவில் போக்குவரத்து போலீசருக்கு நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை சுங்கம் ரவுண்டானா பகுதியில் ஷார்ப் ஷூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் குளிர்சாதன வசதி, மின்விசிறி, கண்காணிப்பு கேமரா, திரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மைக் மற்றும் ஒலிபெருக்கி போன்ற நவீன வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கி நிழல் குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ரவுண்டானாவில் நடைபாதை வாசிகள் சாலையை கடக்கும் சிக்னலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் போக்குவரத்து போலீசாருக்கு நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதுஇங்கு 15க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் கண்காணிப்பு வகையில் கணினி திரைகள் உள்ளன. அத்துடன்ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் இங்கு இணைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா படம் பிடித்து அபராதம் விதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.கோவை மாநகரில் சாலை விபத்தில் உயிரிழப்புகளை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் போக்குவரத்து துணை கமிஷனர் ராஜராஜன், உதவி கமிஷனர் அருள் முருகன், ஷார்ப் ஷூட்டர்ஸ் நிறுவனர் ஆதித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.