திருமணமாகி 23 நாட்களே ஆன புதுப்பெண்ணை தாக்கி சித்ரவதை – கணவர் மீது புகார்.!!

கோவை துடியலூர் அருகே உள்ளநல்லாம்பாளையம் .சீனிவாச நகர் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மனைவி ஸ்ரீஜா ( வயது 22) இவர்கள் இருவருக்கும் கடந்த 7- 11 – 20 24 அன்று ஆர் எஸ். புரம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்ரீஜா துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து கணவர் ஸ்ரீநாத்தை தேடி வருகிறார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தாக்குதல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..