கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், சின்னான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் சத்யா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் நவீன் ( வயது 23 )என்பவர் சத்யாவுக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தாராம். இதை பார்த்து சத்யா சத்தம் போட்டார் .அதற்குள் நவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் . இது குறித்து சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் வழக்கு பதிவு செய்து நவீனை தேடி வருகிறார்.இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.