கோவை மாநகராட்சி பள்ளிக்கூடத்தின் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு..!

கோவை கவுண்டம்பாளையம்,ராமசாமி நகரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கூடம் உள்ளது. இங்கு கடந்த 13 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை விடுமுறையையொட்டி பள்ளிக்கூடம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தின் அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 கம்ப்யூட்டர்கள், 3 கீபோர்டு, 3 மானிட்டர் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் இது குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியை முத்துராஜாமணி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..