கோவை : வணிகர்களுக்கு சுமையாக கடைகளில் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வற்புறுத்தியும்,வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்யுகோரியும், குப்பை வரி மாநிலம் ,முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்தி பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன் இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவைமாவட்ட தலைவர் ஜி.இருதய ராஜா தலைமை தாங்கினார்.கோவை மாவட்ட பொருளாளர் ஜி .ஏ .வஹாப், கோவை மாவட்ட துணைத்தலைவர் எஸ் .தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மண்டல தலைவர் சூலூர் டி. ஆர் .சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார். முன்னதாக கோவை மாவட்ட செயலாளர் ஆர். எஸ். கணேசன் வரவேற்று பேசினார். முடிவில் மாநகர செயலாளர் ஜி. பாக்கியநாதன் நன்றி கூறினார். ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்..
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரி கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!
