ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் உள்ள தூய ஆவியானவர் சர்ச் முன் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் இரவு ரோந்தில் வாகன தணிக்கை செய்த போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான கணேஷ் புகையிலை 194 கிலோ, ஹன்ஸ் புகையிலை 10 கிலோ, கூலிப் 20 கிலோ உள்பட 250 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இப்பொருட்களை வாகனத்தில் ஏற்றுக் கொண்டு வந்த ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோழியார்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாரிகிருஷ்ணன் மகன் சித்திரவேல் 23, புல்லமடை மேற்கு தெரு சுப்பையா மகன் ராஜகுமார் 44 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..