வேனுடன் கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல் – 3 பேர் கைது..!

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சிறப்புசப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று அங்குள்ள என் .பி.இட்டேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்தவர்களிடம் 500 கிராம் கஞ்சா 2 கிராம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக குறிச்சி பிரிவு என்.பி இட் பேரி 2-வது வீதியைச் சேர்ந்த நவ்ஷாத் ஷபிக் (வயது 35) குனியமுத்தூர், காந்திநகர் , பசீர் அகமது (வயது 36) உக்கடம் லாரி பேட்டை அண்ணா நகர் ஜாபர் சாதிக் ( வயது 35 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3 செல்போன்களும், வேனும் ,கஞ்சா, போதை மாத்திரைகள்பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சபீக் என்பவரை தேடி வருகிறார்கள்.