கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்..!

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வருகின்றனர். இதனை தொடர்ந்து

கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் குனியமுத்தூர் புட்டு விக்கி பாலம் சித்திரை சாவடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் வழங்கப்பட்டும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி சாக்கு மூட்டையுடன் கூடிய தலா 50 கிலோ எடை கொண்ட 40 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வாகனத்தை ஓட்டி வந்த மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் ஓட்டுநர் அய்யாதுரை என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாய்பாபா காலனி NSR சாலையில் உள்ள இரண்டு கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகள் என மொத்தம் 2000 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வாகனத்தில் ஏற்றி கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும்படி சுதாகர் என்பவர் அனுப்பி வைத்ததாக கூறிய வாக்குமூலத்தின் பேரில் கூட்டுறவு நியாய விலை கடையின் விற்பனையாளர்களான கோவை வடவள்ளியை சேர்ந்த பீனா மற்றும் சிங்காநல்லூரை சேர்ந்த லதா ஆக இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் சுதாகர் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். .