நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் எம் பி ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்திருப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற வருகிறது. இதனுடைய விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8ம் தேதி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் விசாரணைக்கு ஆஜராத்தில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதையடுத்து, ஜூலை 21 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி இருந்தது. இதை ஏற்ற சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கடந்த 21 ஆம் தேதி நேரில் ஆஜரானார்.
இந்நிலையில், சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளனர். சோனியா காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சமந்தா அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்.