திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் வி ஜே செந்தில் தலைமை தாங்கினார் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அனைத்து வேளாளர் வெள்ளாளர் உட்பிரிவு சங்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வேளாளர் வெள்ளாளர் என்ற ஒரே பெயரின் கீழ் பதிவு செய்ய அரசிடம் கோரிக்கை வைப்பது அரசாங்க கெஜட்டில் தற்போது தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ள வேளாளர் உட்பிரிவுகளை வேளாளர் வெள்ளாளர் என்ற பொதுப் பெயராக மாற்றி அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கையை வைப்பது கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிற ஜூலை 13ஆம் தேதி அன்று மாநாடு நடத்தப்படும் போன்ற உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் நிர்வாகிகள் மகாலிங்கம் பாலு பழனிவேல் பேராசிரியர் மாணிக்கம் பாடாலூர் மாணிக்கம் தங்கரத்தினகுமார் வ உ சி கண்ணன் சேது உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்..!
