தஞ்சாவூர் தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்!
இன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்க போராட்டத்தில் வலியுறுத்தல்!!* காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும் தங்களுடைய நிலங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகளை தொடங்கி பயிர்கள் கதிர் விட்டு வளரும் நேரத்தில், போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் குறுவைப் பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் தீர்ப்பின் படி மாதந்தோறும் வழங்க வேண்டிய காவிரி நீர் முறைப்படி தரப்படவில்லை, தற்போது காவேரி ஒழுங்காற்று ஆணையம் வினாடிக்கு 5000 கன அடி நீர் தர உத்தரவிட்டும் கர்நாடக அரசு தர மறுக்கின்றது, இந்த நிலையில் கருகும் குறுவைப் பயிர்களை பாதுகாக்கவும், நடப்பு பருவமான சம்பா பணிகளை தொடங்கிடவும் போதிய நீரை ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும், காவிரி ஒழுங்காற்று ஆணையமும் கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர வலியுறுத்தி காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் தஞ்சாவூரில் பனகல் கட்டிடம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காவேரி படுகை பாதுகாப்பு கூட்டிய நிர்வாகி வீரமோகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சோ. பாஸ்கர், பி.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். குணசேகரன் முடித்து வைத்து சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன்,, அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் தேசிய முன்னணி முன்னாள் பொது செயலாளர் அய்யனபுரம் சி.முருகேசன், ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் இரா.அருணாசலம், அகில இந்திய விவசாயிகள் தொழிற்சங்க நிர்வாகி ஆர் .வாசு ,தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை நிர்வாகி பி.ராஜா சீனிவாசன், தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சாமு.தர்மராஜன், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பி.கோவிந்தராஜ், விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கோ.ஜெயசங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் ,தமிழ்நாடு விவசாய சங்க கூட்டியக்க தலைவர் ஆர்.சுகுமாரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஜி.சங்கர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் சி.பக்கிரிசாமி, காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் ஏ.கே ரவிச்சந்திரன், தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி பி.ராமசாமி, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலசங்கதலைவர் வி.கே.சின்னத்துரை, தமிழக நலிவுற்ற விவசாய சங்க நிர்வாகி கே எஸ் முகமது இப்ராஹிம் உள்ளிட்டார் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க அமைப்புகள், பல்வேறு அமைப்புகள் , இயக்கங்களின் நிர்வாகிகள், தலைவர்கள் பங்கேற்றுனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மாதாந்திர காவிரி நீரை வழங்க மத்திய,மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நீரை கர்நாடக அரசு தர மறுத்தால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளையும். காவிரி மேலாண்மை வாரியம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்க வேண்டும், ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கரில் பயிரிட்டுள்ள குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்க வேண்டும்,காவிரியில் கர்நாடக சட்டரீதியாக வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து விசாரித்து. தீர்ப்பு வழங்கி தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர் முழக்க போராட்டத்தின். முடிவில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கருகி வரும் குறுவைப் பயிர்களை பாதுகாக்கவும், ஏறத்தாழ 13 லட்சம் ஏக்கர் நடப்பு பருவம் சம்பா சாகுபடி தொடங்கிடவும், இக்கட்டான நிலையில் தண்ணீர் இல்லாமல் டெல்டா விவசாயிகள் தவிக்கின்றனர்.மேலும் காவிரி நீரை நம்பி உள்ள 23 மாவட்ட மக்களின் குடிநீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது இந்த நிலைமையில் இருந்து பாதுகாத்திட ,தொடர்ந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவும், அதற்கான உத்தரவை காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒன்றிய அரசு எடுத்திட வலியுறுத்தி இன்று காவேரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் தொடர் முழக்க போராட்டத்தை தஞ்சாவூர்,திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம் ,கடலூர், புதுக்கோட்டை,திருச்சி, அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவேரி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் தமிழ்நாடு விவசாயிகளை காத்திடும் நிலையில் உரிய அளவு காவிரி நீரை திறந்து விட உத்தரவிட்டு,கர்நாடக அரசு திறக்க செய்திட உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை என நம்புகிறோம், இல்லையெனில் டெல்டா விவசாயிகளை பாதுகாத்திட, காவிரி டெல்டா மாவட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்கள்,விவசாய சங்கங்கள் ,தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்கும் போராட்டத்தை முன்னெடுத்து இம்மாத இறுதியில் காவிரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவது என்று காவேரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் தொடர் முழக்கப் போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.