கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கிரே டவுன் பகுதியில் ஒரு பெட்டிக்கடை அருகே இன்று காலை 8-30 மணி அளவில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 40)என்பது தெரிய வந்தது. இவர் கோவையில் சமையல் வேலை செய்து வந்தாராம்.குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக சந்தேகிக்கபடுகிறது..கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் துப்பறியும் நாய் கொண்டு செல்லப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது யாரையும் பிடிக்கவில்லை. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.போலீஸ் குடியிருப்பு மற்றும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..