கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!!

கோவையில் லஞ்சம் வாங்கிய காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்!!!

கோவை கலிக்கநாயக்கன் பாளையத்தில் அப்பகுதி மக்கள் சாா்பில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டாமுத்தூா் காவல் நிலைய தலைமைக் காவலா் மணிகண்டன் என்பவா் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து விழாவின் பாதுகாப்புக்கு வந்துள்ள தனக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று கேட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, காவலா் மணிகண்டன் கேட்ட ரூ.1,000ஐ பொதுமக்கள் வழங்கினா்.

இதை அங்கிருந்த ஒருவா் செல்போனில் விடியோ எடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் லஞ்சம் வாங்கிய விடியோ ஆதாரங்களுடன் அப்பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். அப்போது, அங்கிருந்த காவல் துறை அதிகாரிகள், தலைமைக் காவலா் மணிகண்டனை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டு உள்ளதாகக் கூறினா். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடமிருந்த விடியோ ஆதாரத்தை போலீஸாரிடம் வழங்கிவிட்டுச் சென்றனா்.