கோவையில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி – 3 மையங்களில் நடக்கிறது..!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவ – மாணவிகளுக்கான பொது தேர்வு கடந்து 3-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அந்த பொது தேர்வு விடைத்தாள்கள் பத்திரமாக கட்டு காப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற 4-ம் தேதி (வெள்ளி) தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சி மகளிர் பள்ளி, கோவையில் அவிலா கான்வென்ட் மெட்ரிக் பள்ளி, சர்வஜன மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளன. இந்த பணியை 17-ஆம் தேதிக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு முடிவுகளை மே 9 -ஆம் தேதி வெளியிட அரசு தேர்வு துறை திட்டமிட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..