கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னி கோடு பகுதியில் வசிப்பவர் ரஹீம்
குட்டி (59). கவுன்சிலர் இவர் விலகோடி கிராம பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அமீது மகள் ஸஜினா (38). இவர்கள் 2 பேரும் கொல்லம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவனேஸ்வரம் ரெயில் நிலையத்தில் கொல்லம்-செங்கோட்டை ரெயிலுக்காக காத்திருந்தனர்.
ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் மெதுவாக வந்ததை
பார்த்ததும் 2 பேரும் ஓடிச்சென்று ரெயிலில் ஏற முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரஹீம் குட்டியின் செல்போன் கையில் இருந்து
தவறி தண்டவாளத்தில் விழுந்தது. அவர் அதனை எடுக்க முயன்றார். அப்போது
வேகமாக வந்த ரெயில், அவர் மீது மோதியது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான
அருகே நின்றிருந்த ஸஜீனா ,ரஹீம்குட்டியை காப்பாற்றுவதற்காக அவருடைய கையை
பிடித்தார். ஆனால் அவரும் கீழே விழுந்து ரெயிலில் சிக்கி கொண்டார். இதில் 2 பேரும்
ரெயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து
இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.