கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம், மேல் தெருவை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி ( வயது 53) இவர் ஒடந்துறை ஊராட்சி 7 -வது வார்டு கவுன்சிலராக உள்ளார் .இவரது மனைவி கமலா. இவர்களது வீட்டின் பின்புறம் வசிப்பவர் யுவராஜ் .பைக் மெக்கானிக். இவரது மனைவி நந்தினி நேற்று யுவராஜ் குடிபோதையில் தனது கர்ப்பிணி மனைவி நந்தினியை அடித்து உதைத்தாராம் .இதை வெள்ளியங்கிரியும் அவரது மனைவியும் கண்டித்துள்ளனர் .இதனால் ஆத்திரம் அடைந்த யுவராஜ்காய்கறி வெட்டும் கத்தியால் கவுன்சிலர் வெள்ளியங்கிரியை குத்தினார் இதில் காயமடைந்த வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் மெக்கானிக் யுவராஜைகைது செய்தனர். இவர்நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கவுன்சிலருக்கு கத்திக்குத்து – பைக் மெக்கானிக் கைது..!
