கவுன்சிலரின் தந்தைக்கு கத்தி குத்து- முதியவருக்கு போலீஸ் வலை..!

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை சின்னகல்லிப்பட்டியை சேர்ந்தவர்
செல்வராஜ் (வயது 46). கூலி தொழிலாளி. இவரது அண்ணன் சுப்பன் (56). இவரது
மகன் கவுன்சிலராக உள்ளார்.

சம்பவத்தன்று அண்ணன்-தம்பி இருவரும் நதிகவுண்டன் புதூர் பகுதியில் நின்று
பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த முதியவர்
ஒருவர் சத்தம் போட்டு கொண்டு இருந்தார். பின்னர் அவர் சுப்பன் அருகே வந்து எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள் என கேட்டு தொடர்ந்து பேசி கொண்டு இருந்தார். சுப்பன் அவரிடம் செய்து தருகிறோம், நீங்கள் தற்போது சென்று காலை வாருங்கள் என்றார். உடனே அந்த முதியவர் 2 பேரிடமும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இது அவர்களுக்குள் தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த முதியவர் சுப்பனை தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென கத்தியை எடுத்து குத்தினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் அவரை தடுக்க முயற்சி செய்தார்.
அப்போது அவரையும் குத்தினார். வலியால் அவர்கள் சத்தம் போட்டனர்.அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து முதியவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பளையம் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து செல்வராஜ் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணை அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தியது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ்
(வயது 60) என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி
வருகின்றனர். கவுன்சிலரின் தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் அந்த
பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.