கோவை போத்தனூர் அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 37 )இவருக்கு செட்டிபாளையம் ரோட்டில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் தனது நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக செட்டிபாளையம் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3வது வார்டு கவுன்சிலர் சித்ராவின் கணவர் ரவிக்குமாரின் திட்டப்படி லட்சுமணன் என்பவர் இந்த நிலத்தை அபகரித்தது தெரியவந்தது .இது தொடர்பாக கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.
நில அபகரிப்பு வழக்கில் கவுன்சிலர் கணவர் எஸ்கேப் – போலீஸ் வலைவீச்சு..!
