ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை சந்து பாதை பகுதியில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள கொள்ளைப் பகுதிக்குள் தண்ணீர் தேடி நடுத்தர வயது மாடு ஒன்று வந்துள்ளது. அங்கு உள்ளே நுழைந்த மாடு குடிநீருக்காக தோண்டப்பட்ட காலி தொட்டிக்குள் தண்ணீர் இருக்குமென நினைத்து குடிநீர் குடிப்பதற்காக தவறுதலாக உள்ளே இறங்கியபோது தவறி விழுந்தது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இது பற்றிய தகவல் தெரிந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, தொட்டிகள் இறங்கி மாட்டின் மீது கயிறை கட்டி மிகுந்த சிரமத்துக்கு இடையில் மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், கால்நடை வளர்ப்பவர்கள் கோடை காலங்களில் கால்நடைகளுக்கு உரிய இடங்களில் குடிநீர் வைத்து பராமரிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.