சி.ஆர். பி.எப். முகாமில் சந்தன மரங்கள் கடத்த முயன்ற கும்பலை மடக்கி பிடித்த போலீசார்.!!

கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையத்தில் சி.ஆர் .பி .எப். பயிற்சி கல்லூரி உள்ளது. இங்குள்ள சந்தன மரங்களை ஒரு கும்பல் அடிக்கடி திருடி வந்ததாக புகார் வந்தது . இதையடுத்து சி.ஆர். பி.எப். முகாம் அதிகாரி ராஜேஷ் குமார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சிஆர்பிஎப்  பவுண்டரி வளாகத்துக்குள் புகுந்து சந்தன மரம் திருடிக் கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்தார் . அவர்களை துடியலூர் போலீசில் ஒப்படைத்தார். சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் அந்த கும்பலை கைது செய்தார். விசாரணையில் அவர்கள் சேலம் வாழப்பாடி ,ஆலடி பட்டி பக்கம் உள்ள பக்கம் உள்ள போலபாடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ( வயது 35 ) மதி (வயது 38) கந்தசாமி (வயது 47) வெங்கட்ராமன் ( வயது 35 ) மாரப்பன் ( வயது 40) சுப்பிரமணி ( வயது 39) குமார் (வயது 41) சதாசிவம் (வயது 39) வரதராஜ் (வயது 41) என்பது தெரிய வந்தது . 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களிடமிருந்து 2 கத்தி, மரம் அறுக்கும் ரம்பம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்..