இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் பலர் கிழக்கு இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து இந்த வழக்கில் சோதனைக்காக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சுமார் 8 இடங்களில் இன்று ஒரே நாளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளது.
அமலாக்கத்துறை கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட், சால்ட் லேக், மற்றும் பாகுய்ஹாட்டி போன்ற 5 இடங்களிலும் மேலும் அதே நேரத்தில் வேறொரு 3 இடங்களிலும் சோதனைகளை நடத்தி வருகின்றன. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, அமலாக்கத்துறை அதிகாரிகள் இப்போது பாகுய்ஹாட்டி பகுதியில் உள்ள ஒரு உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில்