சென்னை மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் அதிரடி…
சமீப காலமாக புளியந்தோப்பு பகுதியில் அதிக போதை ஏற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் தன்னையே மறந்து வானத்தில் பறக்கும் உணர்வை போதை ஆசாமிகள் அனுபவித்து வந்தனர். சிலருக்கு போதை அதிகமானால் மரணத்தையும் த ழுவுவது உண்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு தட்டான் குப்பம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கோகுல் என்ற இளைஞர் நண்பர்களுடன் போதை அதிகமாக ஏற வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கலந்து ஊசியில் ஏற்றி உடம்பில் செலுத்திக் கொண்டார். கோகுல் போதை தலைக்கு ஏற உளற ஆரம்பித்து மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார். இது குறித்து அவரது தாயார் கோகுலை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து போதை மாத்திரைகளை யார் சப்பளை செய்து போதை கலாச்சாரத்தை பரப்பி வருகின்றனர் என கண்டுபிடித்தனர். பெரம்பூர் பேரக்ஸ் சாலை சி எஸ் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்கிற ஓட்டை கார்த்திக் ரூபாய் 34 க்கு மும்பையில் வாங்கி ரூபாய் 350 க்கு விற்பனை செய்துள்ளான் என போலீசில் தெரிய வந்துள்ளது .
இது குறித்து கூடுதல் கமிஷனர் அஸ்ரா கர்க் கூறியதாவது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தரப்படும் இந்த வலி நிவாரண மாத்திரை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் செலுத்திக்கொண்டால் அதிகமாக போதை ஏற்றும் என தெரிவித்தார் மேலும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்..