மெடிக்கல் ஷாப் அடித்து உடைத்து சேதம் ; கோவையில் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு
கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் .இவர் அதே பகுதியில் மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நாராயணன் தனது மெடிக்கல் சபை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் இன்று காலை வந்து பார்த்த பொழுது மெடிக்கல் ஷாப் முழுவதும் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டிருந்தது .மேலும் உள்ளே இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மாத்திரைகள் அனைத்தும் தூக்கி சாலையில் வீசப்பட்டு இருந்தது. இதை பார்த்து நாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் அறிந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இரவு நேரத்தில் பூட்டி இருந்த கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து வீசி சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாராயணன் போலீசில் புகார் அளித்துள்ளார் .புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மருந்து வன்னியர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.