அடடா! என்ன அழகு!! ரோஜா பூ டீ போட்டு தரும் ‘மாடல் சாய் வாலி’… சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது..!!

க்னோ: இணையத்தில் எப்போது எது ட்ரெண்ட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு டீக்கடை தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளை கிறங்க வைத்திருக்கிறது.

அழகு பதுமை ஒருவர் பாலில் ரோஜா இதழ்களை போட்டு சுட சுட டீ போட்டு தர அவரை கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். யார் இந்த இளம் பெண்? அவரது கடை எங்கு இருக்கிறது? திடீரென அவர் ட்ரெண்ட் ஆக என காரணம்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்

ஒன்பது டூ ஆறு வேலை, மாதத்தில் முதல் தேதியில் சம்பளம் என்பதை விட்டு விட்டு, சொந்தமாக தொழில் செய்து சாதித்துக் காட்ட வேண்டும் என்பதில் இளைஞர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொழில் வாய்ப்புகள் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் நிலையில் எளிதான சில தொழில்களை செய்தாலே அதில், சாதித்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும் என்பதை பல இளைஞர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

அந்த வகையில் டீக்கடை தொழில் எப்போதுமே புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு கை கொடுக்கும். அதனால் தான் சாய்வாலா போன்ற செயின் நெட்வொர்க் கடைகள் இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறது. நம்பிக்கையும் தொழிலில் நேர்மையையும் இருந்தால் எந்த தொழிலும் வெற்றி பெற்று விடலாம். அது மட்டும் அல்லாமல் தற்போது இணைய உலகில் ஒரு ரீல்ஸ் போட்டாலும் உலக அளவில் பேமஸ் ஆக முடியும்.

அதற்கு உதாரணம் தான் டோலி சாய்வாலா. நாக்பூரைச் சேர்ந்த டோலி சாய்வாலா இணையதளங்களில் தனது ஸ்டைலான உடை மற்றும் நடவடிக்கைகள் மூலம் பிரபலமானவர். அவரது சாய் மேக்கிங் தொடர்பான வீடியோக்கள் பிரபலமான நிலையில் ‘டோலி சாய்வாலா” என அழைக்கப்பட்டார். தொடர்ந்து உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரது கடையில் டீ குடிக்க உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார்.

இந்த நிலையில் டோலி சாய்வாலா போல, மாடல் சாய் வாலி என இணையத்தில் இளம் பெண் ஒருவரும் டீக்கடை மூலமே பிரபலமாகி இருக்கிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிம்ரன் குப்தா பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதற்காக டெல்லியில் இருந்திருக்கிறார். கொரோனா காலம் அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. உணவுக்கு வழியில்லாமல் வேலையும் இல்லாமல் திண்டாடி வந்த அவர் தனது சொந்த ஊருக்கே திரும்பினார்.

எம்பிஏ பட்டம் படித்திருந்தாலும் அழகை மட்டுமே நம்பி தன்னால் சாதிக்க முடியாது என முடிவு செய்த அவர் சாலையோரத்தில் ஒரு சிறிய தள்ளுவண்டி டீக் கடை அமைத்து தொழில் செய்ய தொடங்கினார். தொடர்ந்து இவ்வாறு கடைக்கு பலரும் வர யூடியூபர்களும் படையெடுக்க தொடங்கினர். இதை அடுத்து இன்ஸ்டாவில் ட்ரெண்டான அவர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறார்.

பாலில் ரோஜா இதழ்கள், இஞ்சி, ஏலக்காய் போட்டு அவர் தயாரித்துக் கொடுக்கும் டீ மிகவும் சுவையாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களை அள்ளித் தெளிக்க, தற்போதைக்கு அவர் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்.. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் அந்த கடையை தேடி வருகின்றனர்.