அடடா! அப்படியா!! நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை… மாஸ் காட்டும் உத்தர பிரதேசம்..!!

க்ரா மற்றும் மதுரா ஆகிய இரு நகரங்களுக்கு இடையே விரைவில் ஹெலிகாப்டர் சேவைகள் துவங்கும் என்று உத்தர பிரதேச மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது..
பொது-தனியார் கூட்டு மாடலின் கீழ், நகரத்தின் ஹெலிபோர்ட்களை ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லீசுக்கு விடுவதாக மாநில அரசு கூறியுள்ளது. ஆக்ராவின் எத்மத்பூர் சப் டிவிஷனில் இருக்கக்கூடிய புதிதாக கட்டப்பட்டுள்ள ஹெலிப்போர்ட் மற்றும் மதுராவின் கவர்தனில் இந்த ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என்று மூத்த மாநில அதிகாரி கூறியுள்ளார்.

மதுராவின் கவர்தனில் புதிதாக ஒரு ஹெலிபோர்ட் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக, ஆக்ரா மற்றும் மதுரா ஹெலிகாப்டர் சேவைக்கான டெண்டர் செயல்முறையில், 5 ஹெலிகாப்டர்களை இயக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த 5 நிறுவனங்களில் ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த 2 நகரங்களுக்கு இடையேயான ஹெலிகாப்டர் சேவைகளை வழங்க தேர்வானது.

டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷனிடம் (DGCA) இருந்து முறையான ஒப்புதல் பெற்ற பிறகு ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆக்ரா மற்றும் மதுரா இடையேயான சேவைகளை துவங்கும் என்று சுற்றுலா துறையின் பிரின்சிபல் செகரட்டரி முகேஷ் மெஷ்ரம் தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்டத்தில் லக்னோ, பிராயாக்ராஜ் மற்றும் கபில்வஸ்து இடையேயான சேவைகளும், அடுத்ததாக வாரணாசி மற்றும் அயோத்தியா இடையேயான சேவைகளும் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக 2 முதல் 4 வருடங்களில் மாநிலத்தில் இருக்கக்கூடிய 20 முதல் 25 நகரங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார். உத்தர பிரதேச சுற்றுலாத்துறை இதுபோன்ற ஒரு சேவையை துவங்குவது இதுவே முதல் முறையாகும். ராஜாஸ் ஏரோ ஸ்போர்ட்ஸ் மற்றும் அட்வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஹெலிபோட்ர்ட்டுகள் 25,00,500 ரூபாய்க்கு ஒரு வருட காலத்திற்கு லீசுக்கு வழங்கப்படும். இரண்டு ஹெலிபோர்டுகளின் பொருளாதார வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு டிபார்ட்மெண்ட் கன்சல்டன்சி ஃபெர்ம் KPMG ஃப்ளோர் பேஸ் தொகையை ரூபாய் 13.5 லட்சத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய நிபந்தனையின்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம் ஒப்பந்தத்தை செயல்படுத்தப்படுவதற்கு முன் 2,03,84,000 ரூபாயை செலுத்த வேண்டும். இது 30 வருடங்களுக்கான ஒப்பந்தம். மேம்பாட்டு வேலைகளுக்கு நிறுவனத்திற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும். அதன் பிறகு ஒப்பந்தம் 30 வருடங்களுக்கு ரிவியூ செய்யப்படும்.