கோவை கணபதி கே. ஆர். ஜி. நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 42)சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.இவர் நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை.4 மணிக்கு அவரது மகள் பள்ளிக்கூடம் முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் ,பணம் ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை . யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து அழகப்பன் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.