கோவை குனியமுத்தூர் அழகிரி தோட்டத்தைச் சேர்ந்தவர் துரைசாமி ( வயது 46 ) பெயிண்டர் இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் தங்க ஜிமிக்கி, பணம் ரு. 35 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து துரைசாமி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டப்பகலில் துணிகரம்… வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை..!
