பட்டப்பகலில் துணிகரம்… கண் இமைக்கும் நேரத்தில் 2 கடையில் புகுந்து பணத்தை கொள்ளையடித்து தப்பி ஒடிய பலே திருடன்.!!

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54) இவர் சிறுவாணி ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார்.நேற்று சரவணன் வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது கடையில் வேலை பார்த்து வரும் அமுதவல்லி கடையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடுகள் வாங்குவது போல அங்கு வந்தார்.கடையில் இருந்த ஊழியர் அமுதவல்லியின் கவனத்தை திசை திருப்பி கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.18 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சரவணன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

இதே போல வடவள்ளி ஆனந்த நகரை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 31) இவர் வடவள்ளி இடையர்பாளையம் ரோட்டில் கிளாஸ் – பிளைவுட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இதே ஆசாமி இவரது கடைக்கும் சென்று கடையில் இருந்த தனது உறவினர் கவனத்தை திசை திருப்பி கல்லா பெட்டியில் இருந்த ரூ. 65 ஆயிரத்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்த இரு திருட்டையும் ஒரே ஆசாமிதான் நடத்தி உள்ளார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..