அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் கிறிஸ்துமஸ் குதூகல கொண்டாட்ட விழா நிறுவன தலைவர் கோவை.சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர். பாஸ்டர். டாக்டர். எம். டபிள்யூ. ராஜன் ஜெபித்து விழாவை துவக்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி. ஜி. ஜோஸ்பின் மெர்சி அனைவரையும் வரவேற்றார், மாநில மகளிர் அணி தலைவி ஐ. கரோலின் விமலா ராணி, கௌரவத் தலைவர். பி.எஸ். ஸ்டீபன், செயற்குழு உறுப்பினர் எஸ். கிறிஸ்டி மோனிஷா, கௌரவ ஆலோசகர்கள் ப. சத்தீஷ்குமார், ஒய். அமுல் தாஸ், பி. அருள் டிசில்வா, பி. எபினேசர் இம்மானுவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மறைமாவட்டம் பீளமேடு டி. இ. எல். சி நூற்றாண்டு ஆலயத்தின் தலைமை போதகர் அருள்திரு. ஜே. ஜெயச்சந்திரன் கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தி அளித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மண்டல செயலாளர் களப்போராளி. சுசி கலையரசன் சிறப்புரை ஆற்றினார், விழாவில் நோபல் ஹாட்ஸ் அரிமா சங்கத்தின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாவட்ட தலைவர். லயன் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் செந்தில், செயலாளர் வைரவ மூர்த்தி, முன்னாள் தலைவர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு 200 – தாய்மார்களுக்கு புடவைகளையும் ஆதரவற்று சாலையோரங்களில் உறங்குவோருக்கு போர்வைகளும் வழங்கினார்கள் மற்றும் ஆக்னேஷ் பிரைமரி நர்சரி பள்ளியின் தாளாளர் கல்வி சேவைக்காக சேவை சுடர் விருது பெற்ற எஸ். சுரேஷ் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பிரமுகர் எம். மில்லர் தாஸ், தமிழமுதம் காளிதாஸ் அறப்பணி மையத்தின் தலைவர் நற்குணம் கதை நூலின் படைப்பாளி தமிழமுதம் அய்யாசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். கோவை பி. மில்டனின் பரவசமூட்டும் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறு வயது முதல் கொண்டு கடுமையாக உழைத்து உழைப்பாளர் உயர்ந்த. டி. ராபின் அவர்களுக்கு ஓய்வறியா உழைப்பாளி எனும் விருது வழங்கப்பட்டது, சுங்கம் பகுதி மகளிர் அணி பொறுப்பாளர். புளோரா, ராதாகிருஷ்ணன், முபாரக், உசைபா, பிலோமினா, தங்கமணி, இளவரசி, ருக்மணி, ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர் முடிவில் கௌரவ ஆலோசகர் ஏ. லியோ பெர்னாண்டஸ் நன்றி கூறினார்.