கோவை, தெற்கு உக்கடம் ரோஸ் அவென்யூவை சேர்ந்தவர் சாலி சலீம் (வயது 65) இவரது மனைவி ரசிதா பேகம் இவர் கடந்த 27ஆம் தேதி தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தார். வீட்டில் கணவர் சாலி சலீம் மட்டும் தனியாக இருந்தார்.நேற்று அவருக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து இளைய மகளுக்கு தெரியப்படுத்தி பார்த்தபோது வீட்டின் முன் கதவு உள்பக்கம் தாழ் போடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு சாலி சலீம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மனைவி ரசிதா பேகம் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்..
