கோவை கடைவீதி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவன் முருகேசன். இவர் நேற்று பெரிய கடை வீதியில் நேற்று ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு அமைதிக்கு ஏற்படும் வகையில் பொது இடத்தில் தகராறு செய்து கொண்டிருந்த இருவரை கண்டித்தார்.அவர்கள் இருவரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகேசனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தகராறு செய்து கொண்டிருந்த தெற்கு உக்கடம் ஜி .எ ம் .நகரை சேர்ந்த சர்தார் (வயது 33) தில்லை நகரை சேர்ந்த அந்தோணி ஜெகன் மனைவி மேரி ( வயது 40) ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் , கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..