கோவை போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் – 3 பேர் கைது..!

கோவை காட்டூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தீபக் (வயது 42 ) . இவர் நேற்று கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இருசக்க வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஏட்டு தீபக்கை அரசியல்வாதிகள் பெயரை சொல்லி மிரட்டினாராம்.இது குறித்து எட்டு தீபக் காட்டூர்  போலீசில் புகார் செய்தார். போலீசார் மிரட்டல் விடுத்த கீரன், சிவா பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..