கோவை மத்திய சிறையில் அதிகரிக்கும் கைதிகளின் இறப்பு – மேலும் ஒரு கைதி திடீர் மரணம்..

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என தனித்தனியாக உள்ளனர்..கோவை சிறையில் கைதிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் 4 கைதிகள் மரணம் அடைகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரு கைதி திடீர் மரணம் அடைந்தார். அவரது பெயர் அலெக்ஸ் (வயது 37) இவர் திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் ரோட்டில் உள்ள குருவம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார்.கஞ்சா கடத்தல் வழக்கில்கைது செய்யப்பட்டு தண்டனை கைதியாக 24 -7- 20 21 முதல் கோவை மத்தியசிறையில் உள்ள 23 -வது பிளாக்கில் உள்ள 21 வது அறையில் அடைக்கப்பட்டிருதார் இவருக்கு நேற்று திடீர்உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து ஜெயிலர் சரவணன் குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.