பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலமாக மீட்பு..

கோவை தெலுங்குபாளையம் புதூர், பாரதி ரோட்டை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 55) சலவை தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து இவரது அண்ணன் ரங்கசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் விரைந்து சென்று பார்த்த போது பரமசிவம் அங்கு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்தாரா? அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?என்பது தெரியவில்லை .இவர் கடந்த 11 ஆம் தேதியிலிருந்து வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்தார்.இது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..