முன்னாள் பாரத பிரதமர் நேரு குறித்து அவதூறு கருத்து- யூடியூபர் மீது போலீசில் புகார்..!

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்பசாமி, மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- முன்னாள் பாரத பிரதமர் குறித்து யூடியூபர் பரத் பாலாஜி என்பவர் அவதூறாக கருத்தை பரப்பி வருகிறார். நாட்டில் 17 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்து பல துறைகளில் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்ற முன்னாள் பாரத பிரதமர் நேரு குறித்து அவதூறு கருத்து பரப்பி வருவதுமக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.