பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை உறுதி செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த அமைப்பின் அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. அப்பொழுது தடை விதிப்பை கண்டித்து கோவையில் பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த அமைப்பை தடை விதிப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள சட்ட விரோத செயல்களில் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் மத்திய அரசு விதித்து தடையை உறுதி செய்து உத்தரவிட்டது. தடையை உறுதி செய்து டெல்லியில் நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் 150 – க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்றும் கூறினார்கள்..