தஞ்சையில் டிட்டோ – ஜாக் அமைப்பின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.!

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பி எட் பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட டிட்டோ ஜாக் அமைப்பின் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை பனங்கல்கட்டிடம் முன்பு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி எட் பயிற்சி மாணவர்களை பள்ளிக்கு ஆய்வுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணி சுமை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்திறனை முற்றிலும் பாதிக்கும் எண்னும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் , ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத வகையிலும் கடும் மன உளைச்சளை ஏற்படுத்தும் இ.எம்.ஐ.எஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் சத்யசீலன்தலைமை வகித்தார் .தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்  பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார் .தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதியழகன் துவக்க உரையாற்றினார் .
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயலாளர் கிட்டு,  தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் கார்த்திகேயன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் எழிலரசன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை கோரிக்கை விளக்க உரை ஆற்றினர்.  தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குமார் நன்றி உரை வழங்கினார்..