கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் வால்பாறை நகரக்கழகம் சார்பாக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனைக்கு இணங்க நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார் இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலக் குழு மாநில இணைச்செயலாளர் திம்பம் பட்டி ஆறுச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன்,நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம்,மாவட்ட துணைச்செயலாளர் ஈ.கா.பொன்னுச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜேபிஆர் என்ற ஜே.பாஸ்கர், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, சார்பு அணி நிர்வாகிகள், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .முன்னதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது